பொலிஸ் பரிசோதகரின் 2,22,500 பெறுமதியான தங்க சங்கிலி பறிப்பு
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை, ரண்மலைகொடுவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதக்கத்துடன் கூடிய தங்க சங்கிலியின் பெறுமதி ரூபாய் 2,22,500 என பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment