200 மீற்றர் தூரம் ஓடி ரயிலை நிறுத்திய காவலர் - மஹரகமவில் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது
மஹரகம பிரதேசத்தில் பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்துள்ளது.
ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ஊழியரால் அங்கு நடந்த பெரும் விபத்தை தவிர்க்க முடிந்தது.
மஹரகம ரயில் நிலையத்தில் இருந்து கொட்டாவை நோக்கி சுமார் 600 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள காணியில் இருந்த 40 வருடங்கள் பழமையான பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்துள்ளது.
காலை 8 மணியளவில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது, மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்த இந்த பலா மரம் ரயில் பாதையில் விழுந்துள்ளது.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கெமராவிலும் பதிவாகியுள்ளது.
பலா மரம் ரயில் பாதையில் விழுந்து 02 நிமிடங்களுக்குள் ரயில் ஒன்று கொழும்பு நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட கேட் காவலர், கொட்டாவை நோக்கி சுமார் 200 மீற்றர் தூரம் ஓடி ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
இல்லையெனில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவுடன் பலா மரத்தை வெட்டி 30 நிமிடங்களில் ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
Post a Comment