இலங்கை குரங்குகள் தமக்கும் வேண்டுமென வேறு நாடுகளும் விண்ணப்பம் - பன்றி, குரங்கு, மயிலினால் வருடாந்தம் 20 பில்லியன் ரூபாய் நாசம்
குறித்த வேண்டுகோள்களை தத்தமது தூதரகங்களினூடாக முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு அறிவித்ததாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விலங்கு உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்ததால் குறித்த கோரிக்கைகளுக்கான செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் மயில் போன்ற உயிரினங்களால் வருடாந்தம் 20 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்கள் அழிவடைவதாக அமைச்சர் தெரிவித்தார்.
குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் அவை எதுவும் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் கொண்டு வரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment