இன்றும் 2 விமான சேவைகள் இரத்து, ராஜாங்க அமைச்சரும் சிக்கினார்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) காலை 8.20 மணியளவில் 200 பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டு நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 181 என்ற விமானம் பல மணி நேரம் தாமதமாகியிருந்த நிலையில், பின்னர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் ராஜாங்க அமைச்சர் ஒருவரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது..
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட மற்றைய விமானம் இன்று காலை மும்பைக்கு புறப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளை ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment