Header Ads



சிறந்த இளம் விஞ்ஞானியாக 14 வயது சிறுவன் - காரணம் என்ன..?


தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் சோப்பை உருவாக்கியதற்காக 14 வயது சிறுவனுக்கு அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் கௌரவம் கிடைத்துள்ளது. 


வர்ஜீனியாவின் Annandale-இல் உள்ள W.T. Woodson உயர்நிலைப் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் பயிலும் Heman Bekele, 3M Young Scientists Challenge எனும் போட்டியில் கலந்துகொண்டார். 


அமெரிக்காவில் 5 ஆம் தரத்தில் இருந்து 9 ஆம் தரம் வரை பயிலும் மாணவர்களின் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், உலகில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளில் அவர்களை ஈடுபடுத்தவும் 3M and Discovery Education எனும் அமைப்பு மூலம் 3M Young Scientists Challenge  போட்டி நடத்தப்படுகிறது. 


ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பிறந்து, 4 வயதில் அமெரிக்காவிற்கு பெற்றோருடன் வந்த Heman Bekele, அமெரிக்காவிலேயே தொடர்ந்து கல்வி பயின்று வருகிறார். உயிரியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் அவர் மிகவும் ஆர்வமுடையவர். 


இந்த இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய Heman Bekele-ஐ  Dr. Mahfuza Ali எனும் விஞ்ஞானி வழிநடத்தியுள்ளார். 


3M Young Scientists Challenge-இல் பங்கேற்ற Heman Bekele, தனது கண்டுபிடிப்பாக புதிய சோப் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார். 


இந்த சோப்பிற்கான உற்பத்தி செலவு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவு. ஆனாலும், தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க இந்த சோப்பினை பயன்படுத்தலாம். 


இந்த மருத்துவ சோப்பில் மூன்று பொருட்களைச் சேர்த்து மலிவு விலையில்  Heman Bekele உருவாக்கியுள்ளார். இந்த பொருட்கள் dendritic செல்களை செயல்படுத்துகின்றன.  இது கொடிய புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


பல இளம் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் Heman முதல் பரிசை வென்றார். அத்துடன் "அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி" எனும் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 


இப்போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையாக $25,000 வழங்கப்படும்.


2020-இல் உலகளவில் சுமார் 15 இலட்சம் பேருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பின்னணியில் Heman-இன் இந்த முக்கிய கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.


 

No comments

Powered by Blogger.