Header Ads



12 போலி தங்க ஆபரணங்களை திருட, 2 பெண்களை கொலைசெய்த பாதகன்


 மாத்தறை – பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


உயிரிழந்த இரு பெண்களும்  தடியால்  தாக்கப்பட்டு  கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


குறித்த வீட்டில் இருந்த 12 போலி தங்க ஆபரணங்கள் மற்றும் நாட்டு நாணயங்களை திருடுவதற்காக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  குறித்த  நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பாலட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய மற்றும் மாத்தறை அபேகுணவர்தன மாவத்தையில் வசிக்கும் 70 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் நேற்று (07.10.2023) காலை மாத்தறையில் உள்ள தனது வியாபார இடத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை கண்டுள்ளார்.


வீட்டின் வெளியே அமைந்துள்ள குளியலறை மற்றும் கழிவறையில் சடலங்கள் காணப்பட்டதாகவும், பின்னர் இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவ இடத்தின் அருாமையிலுள்ள வீடொன்றின் பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் தொடர்பிலான தகவல் தெரியவந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.