ஜனாதிபதி தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
அரசியலமைப்புச் சட்டப்படி, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்து அந்த காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சண்டே தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் அரசின் செலவினம் ரூ.3,860 பில்லியன் ஆகும். இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 203 பில்லியன் ரூபா அதிகரிப்பு ஆகும். 2023இல் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.3,657 பில்லியன்.
அடுத்த ஆண்டு கட்டாயம் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் அரசாங்கத்துக்கு உள்ளதால் 11 பில்லியன் ரூபாவை தேர்தலுக்கான ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment