10 கோடி ரூபா பெறுமதியான நெல்லை காணவில்லை
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 5 நெல் களஞ்சியசாலைகளில் நெல் கையிருப்பு காணாமல் போனமை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
10 கோடி ரூபா பெறுமதியான நெல் தொகையே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
குருணாகல் மற்றும் மேலும் சில நெல் களஞ்சியசாலைகளிலும் வைக்கப்பட்டிருந்த நெல் தொகையே திருடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அமைச்சரினால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன மட்டத்திலான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் விவசாய மற்றும் கைத்தொழில் அமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment