அரசுக்கு 10,000 கோடி ரூபா வருவாய் இழப்பு
வெள்ளை சீனி , பருப்பு இறக்குமதிக்கு கிலோவுக்கு 25 சதம் குறைக்கப்பட்டதால் அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 2020 இல், நிதி அமைச்சு வெள்ளை சீனி , பருப்பு இறக்குமதி வரிகளை 25 சதமாக குறைத்தது.
அன்று முதல் இன்று வரை 25 சதம் வரியின் கீழ் 18 இலட்சம் மெட்ரிக் தொன் சீனியும், 7 இலட்சம் மெட்ரிக் தொன் பருப்பும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment