Header Ads



முஸ்லீம் சமூகத்தின் துரோகி முஷாரப் Mp - காரணத்தை விளக்கும் வேலுகுமார்


நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முஸ்லீம் சமூகத்தின் துரோகி என நாடாளுமன்ற உறுப்பினரான எம். வேலுகுமார் தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் ( 08.09.2023) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும்“ ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல் 4 இல் வெளியிட்டுள்ள விடயங்களை திசை திருப்பி ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றத்தை திசைதிருப்பி அரசாங்கத்தை காப்பாற்றும் வேலையை அரச தரப்பு எம்பியான முஷாரப் முன்னெடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.


இந்த நாட்டில் மிகவும் கௌரவமாக வாழ்ந்த முஸ்லீம் சமூகம் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின் நாட்டின் துரோகிகளாக பார்க்கப்பட்டார்கள்.


இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிவந்துகொண்டு இருக்கின்ற நிலையில் அசாத் மௌலானாவை துரோகி என்று குறிப்பிடுகின்ற, இந்த விடயத்தை திசை திருப்ப முயலுகின்ற முஷாரப் அவர்களும் முஸ்லீம் சமூகத்தின் துரோகி ஆவார்.


அரசை காப்பாற்ற இவ்வாறு அவர் செயற்படுவது வெட்கக்கேடான விடயம் " என்றும் வலியுறுத்தியுள்ளார்.


அத்தோடு இந்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். Tamilwin


No comments

Powered by Blogger.