பல கொலைகளுக்கு காரணமான கிழக்கின் அவமானம் பிள்ளையான் - சாணாக்கியன் Mp
கிழக்கின் அவமானம் பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை அவர்களுக்கான நடவடிக்கை என்ன?. அவற்றினை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
பல கொலைகள் உடன் சம்பந்தப்பட்ட திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) அமைப்பினை சேர்ந்த பலர் இன்றும் சுகந்திரமாக உள்ளனர் அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள இருக்கின்றது அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லையா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். எமக்கும் கிழக்கில் இவர்களினால் அச்சுறுத்தல் எழலாம் .
மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றார்கள். அவர்களுக்கான தீர்வினை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும். அரசு இனங்களுக்கு இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தி இன முறுகல் நிலைக்கு வித்திடாமல் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும்.
அத்துடன் திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தாக்கப்பட்டதற்கு பின்னால் இலங்கை இராணுவப் பிரிவினரின் திட்டமிட்ட செயல் அவர் ஒரு பாதையில் செல்வதாக இருந்தது பின்பு பாதை மாற்றப்பட்டு புதிய பாதை வழியே சென்று கொண்டிருந்தார் அது ராணுவப் புலனாய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. இதிலிருந்து எமக்கு சந்தேகம் வருகின்றது இது தாக்குதலுக்கு இவர்களே காரணம் என்று.
லண்டன் பல்கலைக்கழகம் UNIVERSITY OF LONDON இனது சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுதப்படுகின்றதா என்பது தொடர்பான கற்கைநெறிக்கு கடந்த ஐந்து நாட்களாக லண்டன் சென்றிருந்தேன்.
இதன் நோக்கமானது இலங்கையில் அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் இவ் கற்கை நெறிகளானது இருந்தது. அதனடிப்படையில் எமது நாட்டிலும் பல சட்டங்கள் நடைமுறைப்படுதப்படாமல் காணப்படுகின்றன அவற்றினை அரசு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
Post a Comment