Header Ads



அரசாங்கம் உடனடியாக பதில் வழங்க வேண்டும் - இம்தியாஸ் Mp


வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டின் சுகாதார துறையின் பிரச்சினைகள் மாத்திரம் அல்ல. மக்கள் உயிர் வாழ்வதற்கும் கூட முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.


அநுராதபுர மாவட்ம முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனம் நடத்திய இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ செயலமர்வு  அநுராதபுரம் சீரிசீ வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்…


அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்த “இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ செயலமர்வு” கடந்த (2023.09.02) ஆம் தினம் அநுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஏ.ஜி.நளீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.


இதில் வளவாளர்களாக கொழும்பு பல்கலைக்கழத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி மஹீஷ்,இலங்கை பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம்.அஜிவதீன், ஜோர்தான் சர்வதேச இஸ்லாமிய மருத்துவ சங்க சம்மேளனத்தின் பயிற்றுநரும்,ஊக்குவிப்பு பயிற்றுநருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.இர்ஹாம் ஷரபி ஆகியோர் கலந்து கொண்டனர்.


அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,  சம்மேளனத்தின் தேசிய தலைவரும், இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன், முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளரும்,இலக்கியவாதியும்,சட்டத்தரணியுமான ரஷீத் எம் இம்தியாஸ், சம்மேளனத்தின் பிரதி தேசிய தலைவரும்,  கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஷாம் நவாஸ், சம்மேளனத்தின் தேசிய செயற்திட்ட பனிப்பாளரும், IVAY பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பௌசர் பாரூக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்கற்கைகள் பிரிவுகளில் ஈடுபடும் 97 இளம் தலைவர்கள் ஆர்வத்தோடு இதில் பங்கேற்று பயன்பெற்றனர்.


சமூக மதிப்பீட்டாய்வு மூலம் சமூக மட்டத்திலான பிரச்சினைகளுக்கு கூட்டு தலைமைத்துவ ரீதியாக தீர்வு வழங்கல்,சூழலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் திறன்கள், தலைமைத்துவ ஆற்றல் மேம்பாடு சார்ந்த விடயதானங்களை முன்னிலைப்படுத்தி விரிவுரைகளும், பயிற்சிகளும் இதில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.