Header Ads



தீக்கிரையாக்கப்பட்ட Mp யின் வீடு, புத்தகங்களும் நாசம் - A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறு (படங்கள்)


நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உடுகும்புரவின் மகள், வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுகளின் படி சிறந்த சித்தியைப் பெற்றுள்ளார். 


கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உடுகும்புரவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. 


இதன்போது, வீட்டில் இருந்த உடமைகள் மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இவ்வாறான நிலையில், மிக இக்கட்டான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுத்து தனது மகள் பரீட்சை எழுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 


மேலும், பெற்றோர்களாகிய எங்களுக்கு மிகச் சிறந்த பெருமையை மகள் தேடிக் கொடுத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





No comments

Powered by Blogger.