கெஹலியவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு
சுகாதார அமைச்சரை் கெஹலிய ரம்புக்வெல்லவை பதவி நீக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரேணையை எதிர்த்து வாக்களித்தன. தேசிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் தலையிலான அணியினர் பிரேரணையை எதிர்த்தே வாக்களித்தனர்.
Post a Comment