அமெரிக்க குடியுரிமை, ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பசிலின் அறிவிப்பு
இதற்கு முன்னரும் தான் இதே நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
மழைப்பெய்தால், குளம் நிரம்பும் போன்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது.
எவ்வாறாயினும் கட்சி என்ற வகையில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற பலமான யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட போகும் வேட்பாளர் யார் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் பசில் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, இலங்கையின் அரசியலில் நேரடியாக பங்குப்பற்றுவார் என அந்த கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இலங்கையின் சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச இலங்கையில் அரசியல் ரீதியான அதிகார பதவிகளையோ, அரச உயர் பதவிகளையோ வகிக்க முடியாது.
இந்த நிலையிலேயே அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை என பசில் ராஜபக்ச மீண்டும் கூறியுள்ளார்.
Post a Comment