முதுராஜவெல ஜா-எல வலயத்தை நிரப்புவதை தற்காலிகமாக நிறுத்தவும். - நிமல் லான்சா
- Ismathul Rahuman -
சுற்றாடல் பிரதேசத்தின் ஜா- எல வலயத்தை நிரப்புவதற்காக இலங்கை காணி அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை தற்காலிகமாக உடனடியாக இடைநிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நிமல் லான்சா அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலோ இற்கான அனுமதியை எந்தவொரு சந்தர்பத்திலும் வழங்காத நிலையில் இலங்கை காணி அபிவிருத்தி திணைக்களம் எதன் அடிப்படையில் அனுமதி அளித்தது?
மூன்று மாவட்ட அபிவிருத்தி குழுவில் குறித்த முதுராஜவெல அதி உணர்வுபூர்வமான சுற்றாடல் வலயத்தை நிரப்புவதை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தும் ஒருசிலரின் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு இடம்கொடுக்க முடியாது.
கத்தோலிக்க சபை, சமயத் தலைவர்கள்,சுற்றாடல் அமைப்புகள், பொதுமக்கள் உட்பட சகல துறைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இவ்வாறு செயற்படுவதையிட்டு எமது கவலயை தெரிவிக்கிறோம்.
குறைந்தபட்சம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையாவது அறிவுறுத்தாமல் செய்தது இலங்கை காணி அபிவிருத்தி திணைக்களத்தின் பிழையான செயல்பாடாகும்.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரனதுங்க, பாராளுமன்ற உப குழு என்பவர்களை அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நிரம்பும் வேலையை தற்காலிகமாக நிறுத்துங்கள்.
சுற்றாடல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் போது மற்றொரு சாரார் அந்த சுற்றாடலை மாசுபடச் செய்ய இடமளிக்க முடியாது. அதனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனக்கு கூறினார்.
வர்த்தக அமைச்சர் நலின் பிரனாந்தும் நிலம் லான்ஸா எம்பி யின் கருத்தை ஆதரித்து பேசும்போது ஓஊ அதி உணர்வுபூர்வமான முதுராஜவெல வலயத்தை நிரப்பதற்கு எந்த நிபந்தனையிலும் அனுமதி அளிக்கமுடியாது.
வனஜீவராசிகள், வன பாதுகாப்பு திணைக்களம்,மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியன வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதுராஜவெல சதுப்புநில பிரதேசத்தை பாதீகாத்துப் போசிக்க நடவடிக்கை எடுத்திருக்கும் போது அந்த வலயத்தில் எந்தவொரு நிபந்தனையிலும் அபிவிருத்தி செய்ய இடமளிக்க முடியாது.
பிரதேச அபிவிருத்திக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பவற்றின் அனுமதியின்றி விஷேட செயற்திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என ஜனாதபதி செயலாளர் சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளதனால் காணியை நிரப்புவதை அவசரமாக நிறுத்தவும். முதுராஜவெலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும். அப்போது அதற்கு தலைமைதாங்க வேண்டிய நிலமை எமக்கும் ஏற்படும் என்றார்.
Post a Comment