அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் - சஜித் பிரேமதாச
தங்கம் 3.3 கிலோ கிராம் மற்றும் 91 ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை தவறாகவும் சட்ட விரோதமாகவும் கொண்டு வந்த போது 75 இலட்சம் ரூபாவே அபராதம் விதிக்கப்பட்டதாகவும்,பிரான்ஸ் பிரஜையொருவர் 80 மில்லியன் பெருமதியான தங்கத்தை கொண்டு வந்தபோது 70 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இங்கு சில தலையீடுகள் காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் பல ஷரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாலும்,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பாக சிக்கல்கள் உருவாகுவதினாலும்
விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்தார்.
இது பாராளுமன்றத்தில் 225 பேரையும் பாதிப்பதனால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும்,இது தொடர்பான பிரேரணை என்றாலும் கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment