Header Ads



சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும், விண்கல திட்ட இயக்குநர் யார் தெரியுமா..?


- Mohamed Ashik -


ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த சாதனைகளில் தொடர்ச்சியாக தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 


அந்தவகையில்... இஸ்ரோவின் அடுத்த சாதனையாக... சூரியனை ஆய்வு செய்யும் #ஆதித்யா_எல்_1 விண்கலம் நாளை -02- காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த விண்ணில் ஏவப்பட தயார் நிலையில் உள்ளது. இஸ்ரோவின் அடுத்த மைல்கல்லான இத்திட்டத்தின்... திட்ட இயக்குநராகவும் தமிழர் ஒருவரே மீண்டும் தேர்வாகி உள்ளார். அதுவும் அவர் ஒரு பெண் என்பது தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை. 


★ஆம்..! #AdityaL1 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த #Nigar_Shaji உள்ளார்.

யார் இந்த #நிகர்_ஷாஜி..?!


★தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களின் பெற்றோர் ஷேக் மீரான் & ஜைத்தூன் பீவி. இந்த தம்பதியின் இரண்டாவது மகள்தான் நிகர் ஷாஜி. இவரது இயற்பெயர் நிகர் சுல்தானா.


★பள்ளி காலத்திலிருந்தே படிப்பில் படு சுட்டியாக திகழ்ந்து... "அவருக்கு நிகர்...  நிகர் ஒருவரே" என முதல் மதிப்பெண்கள் பெற்று சாதித்தவர்.


★செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற காலத்தில்...


★1978-79-ஆம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பில் 433 மதிப்பெண்கள் பெற்று... பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்து அப்போதே சானை படைத்துள்ளார்.


★பிறகு, 1980-81 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார் நிகர். 


★அதன் பிறகு, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் முடித்தார். 


★அடுத்து... பொறியியல்-தொழில்நுட்ப உலகில் புகழ்பெற்ற... பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்த நிகர் ஷாஜி, படிப்பு முடிந்ததும் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். 


★அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் சென்று வந்துள்ளார் நிகர் ஷாஜி.


★நிகர் அவர்களின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் முஹம்மது தாரிக் நெதர்லாந்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். நிகர் ஷாஜியின் மகள், தஸ்நீம் தற்போது பெங்களூரில் மருத்துவம் பயின்று வருகிறார். 


★தமிழ்நாட்டில் பிறந்த நிகர் ஷாஜி, தற்போது இஸ்ரோவின் முக்கிய திட்டமான ஆதித்யா எல் 1 திட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றி... ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமையடையச் செய்துள்ளார்.


இத்திட்டம் வெற்றி பெற... பாராட்டுகள் & வாழ்த்துகள். 😊👍👌💐

No comments

Powered by Blogger.