தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது, இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் ஈழத்தமிழரின் சமகால அரசியல் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையினை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆற்றியுள்ளார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment