Header Ads



பாசத்திற்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் பிள்ளைகள்



சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவி சுகயீனமடைந்துள்ளதாகவும், அவர் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை எனவும் மாத்தறை வெலிகம எழுவாவலையை சேர்ந்த அவரது கணவர் தெரிவித்துள்ளார்.


அவரும் முதலைகளால் தாக்கப்பட்டு தற்போது பலத்த காயம் அடைந்துள்ளதால், தனது இரண்டு  பெண் குழந்தைகளை பராமரிக்க குழந்தைகளின் தாயை நாட்டுக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மாத்தறை வெலிகம எலுவாவல பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி தில்ருக்ஷி கடந்த ஜனவரி 18 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார்.


குடும்பத்தின் கடுமையான வறுமையே இதற்குக் காரணம்.


அன்றிலிருந்து, 05 வயது மற்றும் 03 வயதுடைய இரண்டு சிறிய மகள்களின் அனைத்து பொறுப்புகளும் அவரது கணவர் சஜித் குமாருக்கு மாற்றப்படுகின்றன.


மேசன் தொழிலாளியான சஜித், தன்னால் இயன்றவரை தனது குழந்தைகளுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார், ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவத்தை சந்திக்க நேரிட்டது.


சஜித் குமார,


"நான் முதலைகளால் தாக்கப்பட்டேன், நான் இப்போது படுக்கையில் இருக்கிறேன், நான் உண்மையில் ஆதரவற்றவன், இந்த மருந்துகளை பணத்திற்கு வாங்க வேண்டும்.


“ஏஜென்சிக்கு போனால் மனைவியை இலங்கைக்கு அழைத்து வர வேண்டுமானால் 10 லட்சம் கேட்கிறார்கள், பணம் இல்லை ஐயா, பணம் இருந்திருந்தால் வௌிநாடு அனுப்பியிருக்க மாட்டேன். 


"கடந்த மாதம் 29 ஆம் திகதி, மீண்டும் முறைப்பாட்டை புதுப்பித்தேன், நான் சென்று ஒரு மாதமாகியும், எனக்கு ஒரு அழைப்பு கூட வரவில்லை."


"அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது கூட எங்களுக்குத் தெரியாது."


சிறுவர்கள் இருவரையும் முன்பள்ளிக்கு கூட அனுப்பவில்லை. அனுப்புவதற்கான வசதி இல்லை.


"எங்கள் உதவியற்ற நிலையைப் பாருங்கள், தயவுசெய்து அதிகாரிகள் அல்லது யாராவது உதவி செய்து இந்த குழந்தைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வந்து தாருங்கள்.  


"நான் இறந்தாலும் கவலையில்லை. குழந்தைகளுக்கு தாய் கிடைத்த பின்னர்.


சஜித் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் பின்னணியில், சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ளார்.


சவர்க்காரம் பயன்படுத்தியதால் ஏற்பட்ட ஒவ்வாமையால், அவள் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்கள்,  அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அழைத்து வந்து அவரை ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.


 ஹங்சனியின் குழந்தைகள்,


"இதில் இருப்பவர்தான் எங்கள் அம்மா. எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. எங்களுக்கு அம்மா வேணும். எனக்கும் தங்கைக்கும் அம்மாவை கொண்டு வந்து தருமாறு மாமி, மாமாவிடம் கேட்டுக் கொள்கிறோம்."

No comments

Powered by Blogger.