Header Ads



அடுத்து வரும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம்


அடுத்து வரும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று -30- ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்சவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 


இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் வயது உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


மேலும்,  எந்த நேரத்திலும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அதற்காக அச்சம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார். 

1 comment:

  1. இந்த நபர் தேர்தலில் தாம் வெற்றி பெறுவது பற்றி இவ்வளவு உறுதியாகக் கூறுவதன் அர்த்தம் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் தயார் எண்ணுவதற்கான தயார் நிலையில் இருக்கக் கூடும். இதுபற்றி உரியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் கிழட்டு மைனாவின் கருத்தை ஆழமாக ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். அந்த வகையில் நடைமுறையில உள்ள அரசாங்கத்தை எந்த வகைலும் நம்ப முடியாது. பொதுமக்களின் ஆணையில்லாத இந்த எருமைகள் பொதுமக்களுக்கும் இந் தநாட்டு்க்கும் அவர்களின் இருப்புக்காக என்ன அநியாயங்களைச் செய்ய வேண்டுமோ அத்தனை அநியாயங்களையும் எந்தவித தயக்கமும் இன்றி செய்து முடிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.