வரலாற்றில் முதலாவது வைத்தியர் (வீடியோ)
பொலன்னறுவை கட்டுவன்வில் முஸ்லிம் கனிஸ்ட்ட வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்று சேனபுர அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் உயர்கல்யை மேற்கொண்ட அன்புக்குரிய 'இலவ தம்பி இம்றான்' என்னும் மாணவன் மாவட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது வரலாற்றில் எமது ஊரின் முதலாவது வைத்தியராக வருவதற்கு அல்லாஹ் உதவி செய்துள்ளான்
இன்று அவரை கௌரவிக்கும் முகமாக எமது பாடசாலையில் அதிபர் அல்ஹாஜ் ராசிக் பரீட் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வரவேற்பை ஏற்படுத்தி கோலாகலமாக கௌரவ விழாவொன்று நடத்தப்பட்டது ஊர் மக்களும் தங்களுடைய வாழ்த்துக்களை மனமாற வாழ்த்தி வருகின்றார்கள்.
ஊரில் முதலாவது வைத்தியராக வரவிருக்கும் இம்ரான் அவர்களை ஊர் மக்கள் மிகவும் அன்பாக ஆதரித்து வாழ்த்துவது மனதை கவர்ந்ததாக இருக்கின்றது ஊருக்கு ஒரு வைத்தியரை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
Jawfer. JP
Post a Comment