வேலைவிட்டு திரும்பிய இளைஞன் உயிரிழப்பு
கண்டி பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரத்துகொட நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பூஜாபிட்டியவிலிருந்து வெலிகல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூஜாபிட்டியவில் வசிக்கும் 28 வயதுடைய மகேஷ் கருணாதிலக்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளார்.
அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திடீரென வீதியின் எதிர்முனைக்கு இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதியதில் அவர் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment