அழகுற பின்னப்பட்ட ஆகாயத்தின் மீது சத்தியமாக - அல்குர்ஆன்
இதுதான் நம் கண் காணும் பேரண்டத்தில் காணப்படும் மிகப் பெரிய விண்மீன் கொத்தாகும்.
வாயுக்களின் ஈர்ப்பு விசையால் பின்னிப் பிணையப்பட்ட இந்த விண்மீன் திரள் கிரேட் பாஸ் வால் என்று அழைக்கப்படுகிறது. இது நமது பூமியில் இருந்து 5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இது நமது பால்வெளி மண்டலம் போல 830 தனித்தனி விண்மீன் மண்டலங்களைக் கொண்டுள்ளதோடு நமது பால்வெளியை விட தோராயமாக 10,000 மடங்கு பெரியது.
இதன் பிரமாண்டத்தை இன்னும் தெளிவாக விளக்குவதென்றால் நாமும் நமது சூரிய மண்டலமும் ஒரு சிறிய நட்சத்திரத் திரள். இந்த எமது சூரிய மணடலம் போல 200 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திர மண்டலங்கள் நமது பால்வெளிக் கொத்தில் உள்ளன. இப்பபோது இந்த எண்கள் அனைத்தையும் 10,000 ஆல் பெருக்கிப் பாருங்கள்! அதுதான் நீங்கள் காணும் கேலக்ஸியின் பிரமாண்டம்.
((அழகுற பின்னப்பட்ட ஆகாயத்தின் மீது சத்தியமாக!))
அல்குர்ஆன் : 51:7
தமிழாக்கம் / imran farook
Post a Comment