மகன் கைது - தாய் எடுத்த விபரீதமான முடிவு
குருணாகலில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், மஹவ பிரதேசத்தில் 44 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் மகன் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து நபர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த தாக்குதலின் அடிப்படையில் அப் பெண்ணின் மகன் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு மஹவ நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகன் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த பெண் உயிரை மாய்த்ததாகவும் ஆனால் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கமைய அவரது மகன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment