இலங்கையில் உள்ள பாகிஸ்தான் - இந்திய ரசகிர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஆசியக் கிண்ணப் போட்டிகளைக் காண வரும் இலங்கை விளையாட்டு ரசிகர்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசேட டிக்கெட் பெக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது.
கண்டி, பல்லேகலவில் நாளை நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியை காண இலங்கை விளையாட்டு ரசிகர்கள் 1,500 ரூபாவிற்கு டிக்கெட்டை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - நேபாளம் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரத்தியேக டிக்கெட் பெக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு டிக்கெட்டை 2,560 ரூபாய்க்கு ரசிகர்கள் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை கண்டி பல்லேகல அபீத மைதானத்திலும் கொழும்பில் உள்ள வித்யா மாவத்தையிலும் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கூடாரங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
Post a Comment