அநுரகுமாரவின் நிலைப்பாடு இதுதான்
இலங்கையில் பொலிஸ்துறை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் எமது கட்சி உடன்படாது என ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் காணி அதிகாரம் பற்றி பேச்சு நடத்துவதற்கு எமது கட்சி தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோபூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment