கொழும்பு துறைமுகத்தின் அபார வளர்ச்சி, வந்து குவியப் போகும் கப்பல்கள்
அதன் செயற்பாடுகளை அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர குறிப்பிட்டார்.
துறைமுக அதிகார சபையின் நிதியைப் பயன்படுத்தி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 850 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளுக்காக முதற்கட்டமாக 12 அதிநவீன பாரந்தூக்கிகளை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் செயலாளர் தெரிவித்தார்.
இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 20% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் கூறினார்.
அதானி நிறுவனத்தின் முதலீடாக அமைந்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்காக 850 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படுகின்றது.
அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் இதன் முதற்கட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு முனைய நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் கொழும்பு துறைமுகத்தின் வருடாந்த கொள்கலன் இரு மடங்காக அதிகரிக்கும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்தார்.
Post a Comment