Header Ads



சமூர்த்தி உத்தியோகஸ்தராக நடித்து மக்களை ஏமாற்றியவர் கைது


சமூர்த்தி உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு , வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் புதன்கிழமை ( 06) கைது செய்யப்பட்டுள்ளார். 


யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் , ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் பயணிக்கும் முதியவர்களை மறித்து , தன்னை சமூர்த்தி  உத்தியோகஸ்தராக  அறிமுக்கப்படுத்திக்கொண்டு  ,  உதவி திட்டங்கள் வழங்க உள்ளதாக அவர்களுக்கு பேச்சை கொடுத்து , சந்தர்ப்பம் பார்த்து , அவர்களின் நகைகள் உள்ளிட்ட உடமைகளை வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். 


இவ்வாறாக நான்கு சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட 10 பவுண் நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். 


சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


எம்.றொசாந்த் 

No comments

Powered by Blogger.