முதல் முறையாக வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் என்றுகூறி, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சடலங்கள்
மெக்சிக்கோ நாட்டில் ஒரு அரச நிகழ்வின்போது அரசியல்வாதிகள் முன் "ஏலியன்" என்று கூறப்படும் வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்ணாடிப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்ட புதைபடிவ உடல்கள் பெரு நாட்டின் குஸ்கோவில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த மாதிரிகள் நமது உலகின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி அல்ல. அவை டயட்டம் பாசி சுரங்கத்தில் புதைபடிவமாக காணப்பட்டன தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருவின் குஸ்கோ நகரில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை 1,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் குறிப்பிடுகின்றனர்.
வேற்று கிரகவாசிகளின் உடல்கள் இதுபோன்ற வடிவத்தில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் மனித உலகில் உள்ள வேறு எந்த உயிரினங்களுடனும் இந்த உடல்கள் தொடர்பு இல்லை என மெக்சிக்கோ நாட்டின் மூத்த ஊடகவியளாலர் ஒருவரான ஜெய்ம் மௌசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment