சர்வதேச சமூகத்திடம் நேரடியாக, மைத்திரிபால விடுக்கவுள்ள கோரிக்கை
சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதன்படி, ஓரிரு நாட்களில் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதியை சந்தித்து, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
4 ஆண்டுகளாக என்னை இலக்கு வைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நடந்தது என்ன என்பது சனல் 4 காணொளி ஊடாக தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.
சொந்த கோபத்துக்கு பலிவாங்க இந்த மை3 யின் வழமையான சுயநல திட்டத்துடன் இயங்கும் இது போன்ற பகடைக்காய்களால் நாட்டுக்கு நன்மை ஏற்படுவது எப்படிப் போனாலும் இன்னும் இன்னும் அழிவையும் இழிவையும் தான் கொண்டு வரும்.
ReplyDelete