பாராளுமன்றத்திற்குள் ஆடையை அகற்றிய அமைச்சர்
பாராளுமன்ற சபையில் முறையற்ற ஆடை அணிந்திருந்த அமைச்சர் ஒருவர் சபைக்குள் தனது அங்கியை கழற்றியதாகவும், எனவே இது அநாகரீகமான செயல். எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருந்த அமைச்சர் ஒருவர், சபையில் அணிந்திருந்த கோட்டைக் கழற்றியதாக எம்.பி. தெரிவித்துள்ளார்.
“சபைக்குள் ஆடைகளை யாரும் கழற்ற முடியாது. அது உங்களை அவமதிக்கும் செயல். அப்படி யாராவது கழற்றினால் அதுவும் பொருந்தாது என்று கூறிய அவர், விதி மீறலாக நடந்து கொண்டதற்காக அவரது வாக்கை இரத்து செய்யா வேண்டும் என அவர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
சபையில் அவ்வாறான ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதாகவும், அமைச்சரின் வாக்கெடுப்பை இரத்து செய்ய உரிமை இல்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்
Post a Comment