வங்குரோத்துக்காரர்களுடன் அமெரிக்கா சென்ற ஜனாதிபதி -
நாட்டில் மருந்து தட்டுப்பாடு,வைத்திய உபகரண தட்டுப்பாடு உள்ள நிலையிலும்,தரம் குறைந்த மருந்துகளினால் மக்கள் உயிர் இழந்து வரும் நிலையிலும்,மக்ககள் வாழ முடியாத நிலையை அடைந்துள்ள நிலையிலும் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் சென்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு இவ்வாறு மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவது சரியான விடயமா என்றும் கேள்வி எழுப்பினார்.
சிறு கைத்தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றும்,இறப்பர்,தெங்கு ஜீவனோபாயம் சகலதும் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டில் இத்தகைய முக்கிய பிரச்சினைகள் இருக்கும் போது நாட்டை வங்குரோத்துக்குக் கொண்டு சென்ற அமைச்சர்கள் குழுவும் ஜக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்குச் செல்வது நகைச்சுவையான விடயம் என்றும் தெரிவித்தார்.
இன்றைய(21) பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட இது குறித்து கலந்துரையாடப்படாததால் இவ்வாறானதொன்றை செய்ய முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
Post a Comment