Header Ads



மீண்டும் வரப் போகிறாரா கோட்டாபய..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.


கோட்டபாய ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகியதில் இருந்து மௌனத்தை கடைப்பிடித்து வந்தார்.


இந்நிலையில், தற்போது தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த கோட்டாபய முனைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.


நேற்றைய தினம் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்த அவரது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரால் தற்போது புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அதற்குள் தனது பிம்பத்தை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.


மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெற்ற கோட்டாபய ராஜபச, அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் தலைமைத்துவம் ஏற்கப்பட்ட மௌபிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.