Header Ads



நெல்சன் மண்டேலா போன்று செயற்படத் தயார்


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


இதேபோன்று தென்னாப்பிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைத் தொடர்ந்து இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வந்து தங்களின் தவறுகளுக்காக வருந்தினர்.


அப்போதைய தென்னாபிரிக்க ஜனாதிபதி. நெல்சன் மண்டேலா அவர்கள் மனந்திருந்திய பிறகு தவறு செய்த அனைவரையும் மன்னித்தார். அதுபோன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களையும் மன்னிக்க தயார்.


இதன்படி உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் தாங்கள் வகிக்கும் பதவியை விட்டு விலகி,நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.


நேர்மை என்பது அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாது. எனவே அவர்கள் உண்மையைத் தழுவ பயப்பட வேண்டாம் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 296 அப்பாவி உயிர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்து குறுகிய அரசியல் இலாபத்தை அடைந்து கொண்டவர்களை யார் மன்னிப்பது. 296 குடும்ப அங்கத்தவர்களின் இழப்புகளை யார் திருப்பி வழங்குவது, அவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது யார்? இந்த மாபெரும் அநியாயத்தை மன்னிப்பதற்கு உலகில் எந்த மனிதர்களும் பொருத்தமாகவோ தகுதியாகவோ இல்லை. அந்த மாபெரும் கொலைகளைச் செய்த கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கவும் மன்னிக்கவும் மிகவும் தகுதியானவன் அவர்கள் அனைவரையும் படைத்து பரிபாலித்து போஷித்து வரும் இறைவன் மாத்திரம்தான். இத்தகைய மாபெரும் குற்றத்துடன் தொடர்பான அத்தனை பேரையும் மன்னிக்கவும் சரியான தண்டனை வழங்கவும் அந்த இரட்சகன் போதுமானவன். அந்த படைப்பாளனின் பணியை இந்த அற்ப மனிதர்கள் கையில் எடுக்கும் முட்டாள்தனத்தைக் கைவிடுமாறு பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.