பேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தவருக்கு விளக்கமறியல்
முகநூலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (04) பிற்பகல் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எப்பாவல, மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் நேற்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரின் அச்சுறுத்தல் பதிவை இட்ட இளைஞரைத் துரிதமாக கண்டறிந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரைக் கைது செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment