Header Ads



ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண்ணும், அவரது கணவரும்


கொழும்பில் ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாலையில் இருளடையும் நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளை பாலியல் நடவடிக்கைக்கு அழைத்து சென்று கணவருடன் இணைந்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் கணவன் மற்றும் மனைவி ஈடுபட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த 33 மற்றும் 31 வயதுடைய கணவன் மனைவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


அண்மையில் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டியில் ஏறிய சந்தேக நபரான பயணம் மேற்கொள்வது போன்று நடித்து சாரதியை பாலியல் நடவடிக்கைக்கு தூண்டியுள்ளார். பின்னர் பாழடைந்தத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அங்கு பாலியல் நடவடிக்கைக்கு தயாராகி கொண்டிருந்த போது அருகில் மறைந்திருந்த கணவர் முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதன்படி செயற்பட்ட தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரான தம்பதியை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகையை மீட்டுள்ளனர்.


இதற்கு முன்பும் இதுபோன்ற முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்படும் என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நடுத்தர வயதுடையவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் முறைப்பாடு செய்ய வெட்கப்படுவதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய தம்பதிகள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.