பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா சடலமாக மீட்பு
வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்த ஏறாவூரை சேர்ந்த ஹனீபா எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இன்றையதினம் (30.09.2023) தனது உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை அவதானித்த உறவினர்கள் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் பொலிஸாரினதும் சட்ட வைத்திய அதிகாரியினதும் விசாரணை அறிக்கையை வைத்தே இந்த மர்ம மரணத்தின் உண்மை வெளிப்படும் என திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தடயவியல் பொலிஸ் பிரிவினரின் துணையுடன் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment