சாணாக்கியன் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று(01)சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கு உட்படுத்தி தாங்கள் ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஆட்சியைக் கைப்பற்றும் முதல்கட்டமாக வடக்கு கிழக்கிலே இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் திருகோணமலையில் அதிபரும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இவ்வாறாக இந்த விடயங்களை அவதானிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திலே குருந்தூர் மலையிலே மாபெரும் எதிர்ப்பு பேரணியிலேயே தமிழ் மக்கள் ஈடுபட்டனர்.
பிக்குமார் அவ்விடத்தில் முரண்பட்டனர். அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுநருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றனர்.
அந்த விகாரை கட்டுவதை ஒரு பெரிய பூகம்பமாக தெற்கிலே பரபரப்பாக செய்திகள் பரப்பினர். இவ்வாறான சில விடயங்களில் இன முறுகலுக்கான ஆரம்ப நிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.”எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment