கஞ்சா செய்கையை மட்டும் அபிவிருத்தி செய்வதே, நெருக்கடியில் இருந்து வெளிவர உதவும்
ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார்.
“சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மசாஜ் செய்வதற்காக இலங்கைக்கு வருவதால் ஸ்பாக்கள் மிகவும் அவசியம். ஸ்பாக்களின் விரிவாக்கத்தை எங்களால் தடுக்க முடியாது” என டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் மூலம் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தான் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார் ஆனால் நான் தான் பிரசாரத்தை முன்னெடுத்தேன்.கஞ்சா செய்கை யை மட்டும் அபிவிருத்தி செய்வதே பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளிவர உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கலாசாரத்தை அழிக்க தூபமிடும் கஞ்சா நோநாவின் செய்தி ஆச்சரியமாக இருக்கின்றது.
ReplyDelete