கன்றுகளை ஈன்றதும் திடிரென, இறந்துவிடும் தாய் பசுக்கள்
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப்பகுதியில் கடந்த மாதத்தில் மாத்திரம் கன்றுகளை ஈன்ற ஐந்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் கன்றுகளை ஈன்றெடுத்த ஐந்து பசுமாடுகளும் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளன.
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள மிருக வைத்தியசாலையில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வைத்தியர் ஒருவர் இல்லையென தெரிவிக்கும் கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளுக்கு சுகயீனம் ஏற்பட்ட பிறகு ஹட்டன் பகுதியில் உள்ள மிருக வைத்தியசாலையின் வைத்தியருக்கு அறிவிக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு அறிவித்தாலும் பொகவந்தலாவ பகுதிக்கு வருவதற்கு நான்கு மணித்தியாலங்கள் எடுப்பதாகவும் அங்கிருந்த வைத்தியர் வருவதற்கு முன்னமே கால்நடை இறந்து விடுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு பொகவந்தலாவ மிருக வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரையும் நியமிக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
எஸ் சதீஸ்
Post a Comment