Header Ads



சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கையைச் சேர்ந்த, தர்மன் சண்முகரத்தினம் தெரிவு


சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் திகதியுடன் முடிவடைகிறது.


இதையடுத்து புது ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


வாழ்க்கை வரலாறு


இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001இல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் பிரதமரின் ஆலோசகர் நிதியமைச்சர் கல்வி அமைச்சர் துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.