Header Ads



ரணிலின் அதிரடித் தீர்மானம்


இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து - பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை கூறியுள்ளார். 


சீனாவின் ஆராய்ச்சி கப்பலான ஷி யான்- 6 விரைவில் இலங்கைக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டு கப்பல்கள் நங்கூரமிடப்படும் துறைமுகங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


அத்துடன், இலங்கையில் நிறுத்தப்படும் வெளிநாட்டு விமானங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களும் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறையின் மூலம் அறிமுகப்படுத்தப்படுமென அவர் கூறியுள்ளார். 


இந்த செயல்முறை தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் எனவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உயர்மட்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 


இலங்கைக்குள் எந்த வகையான வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைய முடியும் மற்றும் அவை எத்தனை நாட்கள் இலங்கைக்குள் இருக்க முடியுமென்பது குறித்த விடயங்கள் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார். 


அத்துடன், சீனாவின் கப்பல் இலங்கை துறைமுகத்தை சென்றடைவது குறித்து இந்தியா கரிசனைகளை வெளியிட்டுள்ள நிலையில், இவற்றை கருத்தில் கொண்டு குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறை தயாரிக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.