Header Ads



முஸ்லிம்கள் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் - ரிஸ்வி முப்தி


முஸ்லிம்கள் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்தல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலாமா சபையின் தலைவர் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.


அதேவேளையில்  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினகராகக் கலந்து கொண்ட கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் உரையாற்றும் போது,


ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள் கொழும்பில் இடம்பெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வமைப்பு முஸ்லிம் சமூகத்திற்கு உன்னதமான பணிகளை ஆற்றி வருகிறது என்று குறிப்பிட்டமை மிகவும் முக்கியமான விடயமாகும் என்று அவர் தெரிவித்தார்.


அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின்   நூற்றாண்டு  நிறைவு தினத்தை முன்னிட்டு  கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை மற்றும் அதன் அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து நடத்தும்  முப்பெரும் விழாவும் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலாமா சபையின் தலைவர் அ~;n~ய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் 3-09-2023 ஞாயிற்றுக் கிழமை காலை. 9.30 மணிக்கு கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர்  அ~;n~ய்க் எச். உமர்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது


இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலாமா சபையின் தலைவர் அ~;n~ய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.


கண்டி மாவட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின்  செயலாளர் அ~;n~ய்க் ஏ. எல். அப்துல்  கப்பார் (தீனி) ஜம்மிய்யதுல் உலமா சபையின் உயர் பீட உறுப்பினர்கள், பெரு எண்ணிக்கையிலான உலமாக்கள் கலந்து கொண்டனர்.  


இந்நிகழ்வில் விசேட அம்சமாக 65 வயதுக்கு மேற்பட்ட உலமாக்களைக் கௌரவித்தல்,  45 வயதின் கீழ் இறையடி எய்திய உலமாக்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் சமூகப் பங்காற்றி இறையடி எய்திய  உலமாக்கள் மற்றும் சமூகவியலாளர்களை நினைவு கூர்ந்து  விசேட துஆப் பிரார்த்தனை போன்ற பல  நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றன.


இக்பால் அலி

No comments

Powered by Blogger.