Header Ads



கண்ணீர் சிந்திய தயாசிறி


சுதந்திரக் கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களை விட்டு ஒருபோதும் விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


நேற்று (09) குருநாகல் கட்சி அலுவலகத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் உணர்ச்சிவசப்பட்டார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று குருநாகல் ஹெட்டிபொலவில் உள்ள அவரது பிரதான அலுவலகத்திற்கு சென்றார் .


அவரை வரவேற்க வீதியின் இருபுறமும் கட்சி உறுப்பினர்கள் திரண்டிருந்ததுடன், கூட்டத்தில் உரையாற்றும் போது எம்.பி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.


பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அங்கு மேலும் உரையாற்றுகையில் :


“இந்தக் கிராமத்தில் இருந்து அரசியலைத் தொடங்கினேன். செயலாளராக இருந்து ஜனாதிபதி சொன்னதைச் செய்தேன். கட்சியில் இருந்து நீக்குமாறு கோரிய போது அதற்கு இணங்கினேன் . ஒழுக்காற்று விசாரணை நடத்தச் சொன்னபோது ஒழுக்காற்று விசாரணை நடத்தினேன். இன்று கட்சியை விட்டு வெளியேறி அமைச்சர் ஆனவர்களும் உள்ளனர். கட்சி அர்ப்பணிப்புள்ள நபர் வெளியில் இருக்கிறார்.


“கட்சியின் தலைவர் யாரையும் விரட்டலாம்.ஆனால் கட்சிக்காக என்னை தியாகம் செய்ததை நினைவில் வையுங்கள். கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு சம்மதித்து கட்சித்தலைவருக்கு கீழ் படிந்தேன் நின்றேன். என்னை நாய் போல் வெளியே விட முடியாது. நானும் தலைவரும் அப்பா மகன் போன்றவர்கள். சில கெட்ட நண்பர்கள் எனது தந்தையுடன் நெருங்கி பழகினர். தயாசிறி ஜயசேகரவை அழிக்க நினைத்தார்கள். என கூறினார்.”

No comments

Powered by Blogger.