தந்தையின் மண்ணறை வாழ்க்கை பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை
கேரள மக்களை அவர் மிகவும் நேசிக்கிறார்.அதற்கு ஒரு காரணம் உண்டு.அதாவது அவரின் தந்தை கல்ஃபான் தமீம் 20 வருடங்களுக்கு முன் கேரளாவில் கொயிலாண்டி என்னும் ஊரில் கல்ஃபான் இஸ்லாமிக் செண்டர் என்னும் பெயரில் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்கினார்.
மர்கஸின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிலையத்தில் ஹிஃப்ளுல் குர்ஆன்,மற்றும் ஷரீஅத் கல்லூரியும் செயல்படுகிறது.
அவர் தந்தை உருவாக்கிய கல்வி நிலையத்தை பார்வையிடுவதற்க்கும் அங்கு பயிலும் குழந்தைகளின் துஆவில் கலந்து கொள்ளவும் நினைத்தார்.
ஒரு தினம் யாருக்கும் அறிவிக்காமல், தெரிவிக்காமல் இந்தியா வந்தடைந்தார்.
கொயிலாண்டியிலுள்ள அந்த கல்வி நிலையத்தில் வந்த வேளையில் அவர் கண்ட காட்சி அவரை வியக்க வைத்தது. ஆம் குழந்தைகள் பல்வேறு ஆசிரியர்களுடன் அமர்ந்து குர்ஆன் பாடம் ஓதுகிறார்கள்.ஒரு பக்கம் வேறு ஒரு இடத்தில் ஹதீஸ் பாடம் நடக்கிறது.அவரின் மனம் ஆனந்தத்தால் நிறைந்தது. அக்குழந்தைகளின் குர்ஆன் கல்வி தன் தந்தையின் மண்ணறை வாழ்க்கையை பிரகாசிக்க செய்யும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பின்னர் அவர் கோழிக்கோடு ஜாமிஆ மர்கஸிற்க்கு சென்றார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் டாக்டர் ஹுஸைன் ஸக்காபி மர்கஸை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார்.
அவரின் உரையை கேட்டு தாஹி கல்ஃபான் மெய் மறந்து இருந்தார்.
அவர் அரபு மொழியில் நடத்திய உரை தாஹி கல்ஃபானை வெகுவாக கவர்ந்தது.
உரை நிறைவடைந்ததும் கல்ஃபான் ஹூஸைன் ஸக்காஃபியை கட்டியணைத்தார்.இவ்வளவு அழகான முறையில் இலக்கிய நயத்துடன் அரபிகள் கூட பேச முடியாது என சொல்லி அவரை வெகுவாக பாராட்டினார்.
எல்லாவற்றிற்கும் சாட்சியாக இந்தியன் கிராண்ட் முஃப்தி AP. அபூபக்கர்_பாகவி உஸ்தாது பார்த்து கொண்டிருந்தார்கள். உஸ்தாதிடம் தாஹி கல்ஃபான் சொன்னார்.
நீங்கள் உருவாக்கிய கல்வி உலகத்தை என்னால் ஆழமாகவும் விசாலமாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.
கட்டிட கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடங்களை மட்டுமல்ல அறிவு நட்சத்திரங்களாக பிரகாசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள்தான் உங்களின் சொத்து
இம்மை மறுமை உலகில் எல்லையில்லா சொத்துக்கள் குவித்த உங்களை விட மிகப்பெரிய பாக்கிய சாலி உலகில் வேறு யார் இருக்கிறார்கள்.......
தகவல் #M_சிராஜூத்தீன்_அஹ்ஸனி.
Post a Comment