Header Ads



அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்படும் சிறுவர்கள் - கம்பஹா மாவட்டம் முதலிடம்


நாட்டில் அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.


அதன்படி இந்த வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 1439 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 320 சிறுவர்கள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் கொழும்பின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


மந்த போசணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பிரதேச சுகாதார பிரிவு காரியாலயம் வழங்கும் நிவாரண திட்டங்களுக்கு பெற்றோர்கள் அழைத்து வருவதில்லை எனவும் போக்குவரத்து செலவீனங்களே இதற்கு காரணம் எனவும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர்களுக்கு போக்குவரத்து செலவீனங்களை வழங்க செஞ்சிலுவை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.