அல் - அக்ஸாவின் இமாமாக உளவுக்கார யூதன் - முஸ்லிம்களுக்குள் உள்ள யூதர்கள் குறித்து விழிப்பாக இருப்போம்
யெமன் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து, பாலஸ்தீனில் குடியேறியிருந்த Fadel Abdullah Judah ஐ இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் ஜெருசலம் நகரில் உளவுப்பணியில் அமர்த்த மிகவும் கவனமாக தெரிவுசெய்தது. யூதாவிற்கு அரபு மொழியில் இருந்த புலமை மற்றும் அரபு கலாச்சாரம் பற்றிய அறிவின் காரணமாக அவரை மொசாட் தெரிவுசெய்தது.
இந்த யூதர் தன்னை முஸ்லீம் உலமா போல வேஷமிட்டுக்கொண்டார். தன பெயரை க்ஷேக் பதெல் அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.அல்குரானை முழுமையாக மனனமிட்டு அதன் விஞ்ஞான விளக்கவுரையையும் கற்றுக்கொண்டார்.
பின் அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொழுகைகளை நடாத்தினார். அங்கு அவர் ஒரு பக்தியுள்ள க்ஷேக் போல நீண்ட தாடியுடன் தோன்றமளித்தார். ஒவ்வொருநாளும் அவரைச்சுற்றி மக்கள் கூடினர். அவர் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.அதிகமான நேரம் அல்குரானை ஓதினார். அவர்களின் இஸ்லாமிய மத விஷயங்களுக்கு விளக்கமளித்தார். மார்க்க வட்டங்களையும் சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்தார். மேலும் ஒவ்வொரு துஆ பிரார்த்தனையிலும் பாலஸ்தீனத்தில் உள்ள முஜாஹிதீன்களுக்காக பிராத்தித்தார். யூதர்களையும் ஆங்கிலேயர்களையும் வெற்றிகொள்ள பிராத்தனை செய்தார்.எதிரிகளோடு சண்டையிட தூண்டினார்.
1948 இல் அரபு-இஸ்ரேல் போர் வெடித்தபோது, பதெல் அப்துல்லா தனது அடையாளத்தை ரகசியமாக வைத்திருந்தார். அவர் நிரந்தரமாக வாழ்ந்த நகரமான கான் யூனிஸ் நகரின் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற பிரசங்கங்களில் அரபு படைகளுக்கு வெற்றிபெர பிரார்த்தனையும் செய்தார்.
எகிப்திய இராணுவத்தின் சஹீத் அஹ்மத் அப்துல் அஸீஸின் படைகள் கான் யூனிஸ் நகருக்குள் நுழைந்தபோது, பதெல் அப்துல்லா மினாரத்தின் மேல் ஏறி உரத்த குரலில் அல் குர்ஆனை ஓதி, வெற்றிபெரவருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் பலதடவை,
“அல்லாஹ் பெரியவன்; அல்லாஹ் பெரியவன்”
(அல்லாஹு அக்பர்; அல்லாஹு அக்பர்) எனக்குரல் கொடுத்தார்.
இதனால் பதெல் அப்துல்லா எகிப்திய படைத்தளபதி Ahmed Abdel Aziz மற்றும் அவரின் உபதளபதி Kamal al-Din Hussein ஆகியோருடன் நெருங்கி பழக முடிந்தது, அவர் எகிப்திய வீரர்களுக்கு தொழுவித்தார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் எகிப்திய முகாமுக்கு வழக்கமான செல்லுபராகவும் மாறினார்.
இருப்பினும், கான் யூனிஸ் நகரில் எகிப்தியப் படைகளுடன் வந்த எகிப்திய உளவுத்துறையினர் இந்த ஷேக் நள்ளிரவில் சில மணிநேரங்களுக்கு காணாமல் போவதை அவதானித்தது, எனவே எகிப்திய உளவுத்துறையினர் பதெல் அப்துல்லாஹ்வின் நகர்வுகளைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள்.அவர்கள் பதெல் அப்துல்லாவை கண்காணிப்பதன்மூலம் இரவு நேரத்தில் சியோனிச கெரில்லா முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை கண்டார்கள்.
இக்காலகட்டத்தில் 1948 மே மாதம் 22 முதல் 29 வரையிலான காலத்தில் ஒரு சிறு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இத்தருணத்தில் பலத்த காயமடைந்த ஒரு யூத அதிகாரிக்கு சிகிச்சை அளிப்பதற்கு யூதப் படையினருக்கு சில மருத்துவக் கருவிகளைக் தேவைப்பட்டன.
அந்நாட்களில் சண்டை செய்யும் அணிகளுக்கிடையில் மருத்துவத்தை பகிர்ந்துகொள்வது சாதாரணமாக அம்சமாக இருந்தது. எகிப்தியப் படையினர் யூதர்களுக்கு மருந்துகளை வழங்க தயாராகி மருத்துவர் ஒருவரிடம் தேவையான மருந்துப்பொருட்களையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பிவைத்தார்கள்.அவரின் மற்றொரு பணி யூத களநிலவரத்தை அறிந்துவருவதாகும்.
அவர்கள் எதிர்பாராத தருணத்தில் இவர்கள் ஓரிரவு யூத முகாமிற்கு சென்றபோது அங்கு பதெல் அப்துல்லா இருபதை மருத்துவர் கண்டார்.ஆனால் அவர் அதனைக்காட்டிக்கொள்ளவில்லை.அவர் திரும்பி வந்ததும் எகிப்தின் தளபதியிடம் பதெல் அப்துல்லா இஸ்ரேலிய உளவாளி என்றும் துரோகி என்றும் கூறினார்.பதெல் உளவாளி என்பதை உறுதி செய்துகொண்டனர்.
அத்தோடு பதெல் அப்துல்லா தலைமறைவானார், எகிப்திய முகாமுக்கு வருவதையும் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதையும் நிறுத்திக்கொண்டார்.
ஆனால் ஒரு எகிப்திய வீரர் ஒருவர் அவரைதேடி கொண்டுவர ஒப்புக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார், பின்னர் பதெல் அப்துல்லா எகிப்திய இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ராணுவ நீதிமனறம் மரணதண்டனை வழங்கியது. துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.அவனது உடலை யூத முகாமிற்கு பக்கத்தில் எறிந்தார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்ற பதெல் அப்துல்லாக்கள் இன்றும் நம்மிடையேயும் உலகலாவிய முஸ்லிம் உம்மத்திலும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றார்கள் என்பதுதான்.
எமது உம்மத்தில் இருக்கின்ற இதுபோன்ற எத்தனையோ யூதாக்கள் அல்குரானை ஓதுகின்றார்கள், இறைவனை தொழுபவர்களை வழிநடத்துகிறார்கள்,முஸ்லிம்களிடையே பத்வா கொடுக்கிறார்கள், நாங்கள் அவர்களை மதித்து, அவர்களை மத அறிஞர்களாகவும், நீதியரசராகவும் கருதி, அவர்களிடமிருந்து ஆறுதல் பெறுகிறோம், உண்மையில் அவர்கள் புதிய நல்லொழுக்கமுள்ள யூதாஸ்.
- AKBAR RAFEEK -
Post a Comment