மலர்களைப் போலவே வாழப் பழகுங்கள்
யார் யாரெல்லாம் தங்களை கடந்து செல்கிறார்கள் என்று அவைகள் ஒருபோதும் அலட்டிக் கொள்வதில்லை!
யார் யாரெல்லாம் தங்களை விரும்புகிறார்கள் என்று அங்கலாய்ந்து கொள்வதில்லை!
யார் யாரெல்லாம் தங்களை திரும்பிப் பார்க்கிறார்கள் என்று ஏங்குவதில்லை!
யார் யாரெல்லாம் தங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று எண்ணிப் பார்பதில்லை.
அவைகள் இருக்கும் செடிகளுக்கு எழில் கூட்டும் மலர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றன!
அவைகள் இருக்கும் சூழலுக்கு வாசம் வீசும் திரவியம் என்பதில் மறுக்க முடியாத நிலைப்பாட்டில் இருக்கின்றன.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment