Header Ads



துபாய், அபுதாபிக்காக காத்திருக்கும் இலங்கை - பெயரையும் மாற்றுகிறது


சீன முதலீட்டு திட்டமான கொழும்பு துறைமுக நகரை கொழும்பு நிதி நகரமாக பெயர் மாற்றம் செய்து துபாய் மற்றும் அபுதாபி முதலீட்டாளர்களுக்காக மீள உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.


பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) கொழும்பு நிதி நகரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.


கொழும்பு காலி முகத்திடலை அண்மித்து கடலை நிரப்பி உருவாக்கப்பட்ட 269.3 ஹெக்டேர் பரப்பு, கொழும்பு துறைமுக நகரம் என  பெயரிடப்பட்டது.


இந்த பகுதியை பராமரிப்பதற்காக 2021 மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அமைவாக, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு எனும் பெயரில் தனியான நிர்வாகக் கட்டமைப்பானது உருவாக்கப்பட்டது.

 

No comments

Powered by Blogger.